பிளாஷ்பேக் : திருமண வாழ்க்கை தோல்வியால் ஒளிப்பதிவாளரான விஜயலட்சுமி
மார் 28, 2026
Advertisement
வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் பின்னால் அவர்களை வெற்றியை நோக்கி நகர்த்திய பெரிய தோல்வி இருக்கும். அப்படி தனது திருமண தோல்வியில் இருந்து வெடித்துக் கிளம்பி, முதல் பெண் ஒளிப்பதிவாளர் ஆனவர் பி.ஆர்.விஜயலட்சுமி. பழம்பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகள்.
விஜயலட்சுமிக்கு சினிமா ஆசை எதுவும் இல்லை. ஹோம் சயின்ஸ் படிப்பில் பட்டம் பெற்றவர் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று ஹோம் சயின்ஸ் துறையில் சாதிக்க வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தார். ஆனால் படித்து முடித்த உடனே அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் விஜயலட்சுமியின் புகுந்த வீடு சிறப்பானதாக இல்லை, அங்கு அன்பை விட பணமே பிரதானமாக பார்க்கப்பட்டது. அதனால் 9வது மாத்திலேய திருமண பந்தத்தில் இருந்து வெளியே வந்தார்.
ஏற்கெனவே சினிமா குடும்பம் என்பதால் அதற்குள் செல்ல நினைத்தார். ஒரு நடிகை ஆனால் தனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும் என்பதால் ஒளிப்பதிவாளராக முடிவு செய்தார். அப்போது நம்பர் ஒன் ஒளிப்பதிவாளராக இருந்த அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராக இணைந்தார். அதன்பிறகு 30 படங்களுக்கு மேல் உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர். "சின்ன வீடு" படத்தின் மூலம் தனி ஒளிப்பதிவாளர் ஆனார். அதன்பிறகு அறுவடை நாள், சிறை பறவை உள்ளிட்ட 20 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தார். பாட்டுப் பாடவா, அபியும் அனுவும் படங்களையும் இயக்கினார்.
விஜயலட்சுமிக்கு பிறகு சில பெண் ஒளிப்பதிவாளர்கள் வந்தாலும், அவர் இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!