பிளாஷ்பேக் : ஹாலிவுட்டில் காப்பி அடிக்கப்பட்ட பொம்மை கதை
ஆக 29, 2026
Advertisement
பொதுவாக தமிழில் வெளியான பெரும்பாலான பேய் படங்கள் ஹாலிவுட் படங்களின் உல்டாதான். கண்டண்டை காப்பி அடித்து அதை நம் வாழ்வியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி எடுக்கப்பட்டது. 1988ல் ஹாலிவுட்டில் ரிலீஸான பொம்மைக்குள் பேய் புகுந்து பயமுறுத்திய படம் "சைல்ட்ஸ் பிளே". ஒரு பொம்மை கடைக்குள் புகுந்த சீரியல் கில்லர் ஒருவனை அந்த கடைக்குள்யே போலீஸ் என்கவுண்டர் செய்கிறது. செத்துப்போன அந்த வில்லனின் ஆவி ஒரு பொம்மைக்குள் புகுந்து தன் கொலைப் பணியை தொடர்வதுதான் கதை. 87 நிமிட "சைல்ட்ஸ் ப்ளே" படத்தைத் தழுவி உலகம் முழுவதும் பல படங்கள் வந்தன.
அந்த வரிசையில் வந்த தமிழ் படம்தான் "வா அருகில் வா". பணக்கார குடும்பத்தை சேர்ந்த ராஜா, ஏழை பெண்ணான வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வார். இது ராஜாவின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. வைஷ்ணவியை கொடுமைப்படுத்துகிறார்கள் ஒரு கட்டத்தில் அவளை கொலை செய்து விட்டு தற்கொலை என்று நாடகமாடுகிறார்கள்.
பின்னர் ராஜாவை, பணக்கார பெண்ணான ரம்யா கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்கள். இறந்து போன வைஷ்ணவியின் ஆவி ஒரு பொம்மைக்குள் புகுந்து தன்னை கொன்றவர்களை எப்படி பழிவாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை. கலைவாணன் கண்ணதாசன் இயக்கி இருந்தார். படம் 100 நாள் ஓடி வெற்றி பெற்றது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!