பிளாஷ்பேக் : அக்கா - தங்கை இணைந்து நடித்த ஒரே படம்
ஏப் 17, 2026
Advertisement
1950களில் பத்மினி - ராகினி சகோதரிகள் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். 1980களில் அம்பிகா - ராதா சகோதரிகள் இணைந்து பல படங்களில் நடித்தார்கள். இந்த வரிசையில் அக்கா பண்டரிபாயும் தங்கை மைனாவதியும் இணைந்து நடித்த ஒரே படம் "எங்கள் குலதேவி "
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் கே.பாலாஜி கதாநாயகனாக நடித்தார். ஜாவர் சீதாராமன், வி.ஆர்.ராஜகோபால், எம்.சரோஜா, ஏ.கருணாநிதி, எஸ்.எம்.லட்சுமி உட்பட பலர் நடித்திருந்தனர். எம்.கே.நாதன் கதை வசனம் எழுதியிருந்த இந்தப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். ஏ சுப்பாராவ் இயக்கினார்.
இதில் இடம்பெறும் "மல்கோவா மாம்பழமே" பாடலில் பண்டரிபாயும், மைனாவதியும் பாடி ஆடுவார்கள். அக்கா, தங்கை ஒன்றாக ஆடிப் பாடிய பாடல் இது .
கதை நாயகன் பாலாஜி முதலில் பண்டரிபாயை திருமணம் செய்து கொள்வார். ஒரு ரயில் விபத்தில் அவர் காணாமல் போய்விட அவரது தங்கை மைனாவதியை திருமணம் செய்து கொள்வார். காணாமல் போன பண்டரிபாய் திடீரென திரும்பி வருவார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!