பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம்
ஆக 29, 2025
Advertisement
தமிழ் சினிமாவில் அதிகமான படங்களில் நடித்த ஜோடி சிவாஜி, பத்மினி. இந்த "மேட் பார் ஈச் அதர்" ஜோடியை சேர்த்து வைத்தது பணம். அதாவது பணம் என்கிற படம். இதனை என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கினார், கருணாநிதி வசனம் எழுதினார். பராசக்தி படம் தயாராகி கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் பணமும் தயாரானது. சிவாஜி நடிப்பில் வெளிவந்த இரண்டாவது படம்.
இந்த படத்தை மதராஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர் ஏ.எல்.சீனிவாசன். சிவாஜி, பத்மினியுடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, சி.எஸ்.பாண்டியன், பி.ஆர்.பந்துலு, டி.ஏ.மதுரம், தங்கவேலு உட்பட பலர் நடித்தனர். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். இருவரும் முதன்முதலில் சேர்ந்து இசை அமைத்த திரைப்படமும் இதுதான்.
"எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்" என்ற புகழ்பெற்ற பாடல் இடம் பெற்ற படம். கண்ணதாசனன் எழுதிய பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் பாடினார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…