பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி
மார் 16, 2026
Advertisement
கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர் அஸ்வதி. நடன கலைஞரான இவர் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படம் வெளிவரவில்லை. 1986ல் பாலச்சந்திர மேனன் இயக்கிய "இதிஹய்லி" என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றார். சினிமாவிற்காக தனது பெயரை பார்வதி என்று மாற்றிக் கொண்டார். 1980களின் பிற்பகுதியிலும், 1990களின் முற்பகுதியிலும் மலையாளத் திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக இருந்தார்.
மலையாளத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பார்வதி தமிழில் நடித்த ஒரே படம் "பூவுக்குள் பூகம்பம்". இதில் அவர் தியாராஜன் ஜோடியாக நடித்தார். இந்த படம் தோல்வி அடையவே அவர் தமிழில் நடிக்காமல் மலையாளத்திலேயே கவனம் செலுத்தினார்.
நடிகர் ஜெயராமை 1992ம் ஆண்டு மணந்த பார்வதி, அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தற்போது அவரது மகன் நடித்து வருகிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!