பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றி படமாக்கிய ஏவி மெய்யப்பன்
ஆக 08, 2026
Advertisement
பிரபல வங்காள எழுத்தாளர், நிஹார் ரஞ்சன் குப்தாவின் "மாய மிருகா" என்ற வங்காள நாடகம், மிகவும் புகழ்பெற்றது. 1960-ல் அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. நாடகமாக வெற்றி பெற்ற கதை திரைப்படமாக தோல்வியடைந்தது. ஆனால் இந்த கதை ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் திரைப்படம் ஏன் தோல்வி அடைந்தது என்பதை பற்றி தீவிரமாக ஆலோசித்தார், அந்தப் படத்தைப் பார்த்த செட்டியார் படத்தில் நடித்திருந்த அனைவரும் நாடகத் தன்மையோடு நடித்திருந்ததால் திரைப்படம் வெற்றி பெறவில்லை என்று கண்டுபிடித்தார்.
இந்தக் கதையை வெற்றி படமாக தயாரிக்கலாம் என்று முடிவு செய்தவர், நாயகியாக பானுமதி தேர்வு செய்தார். காரணம் இந்த கதை பெண்களின் மையப்படுத்திய ஒரு கதை.
"அன்னை" என்று டைட்டிலுடன் இந்த படத்தை செட்டியார் தயாரித்தார். படத்தை இயக்க கிருஷ்ணன்-பஞ்சு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதினார். பானுமதியுடன் , எஸ்.வி.ரங்கராவ், சவுகார் ஜானகி, டி.எஸ்.முத்தையா, ஜே.பி. சந்திர பாபு, தெலுங்கு நடிகர் ஹரிநாத் மற்றும் குமாரி சச்சு ஆகியோர் நடித்தனர். ஆர் சுதர்சன் இசையில் உருவான ஏழு பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று படத்தின் வெற்றிக்கு உதவியது. வெளியிடப்பட்ட பெரும்பாலான தியேட்டரில் 100 நாட்களை தாண்டி ஓடியது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!