பிளாஷ்பேக் : வசூலை குவித்த ஹாரர் படம்
ஜூலை 17, 2026
Advertisement
ஒரு பாழடைந்த வீட்டை விலைக்கு வாங்கி குடிபோவார்கள். அங்கு இருக்கும் பேய் அவர்களை துரத்த பல திகிலூட்டும் பல வேலைகளை செய்யும். அந்த பேய்க்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கும். இதுதான் ஹாரர் படங்களுக்கான அடிப்படை ஒன் லைன். சந்திரமுகி தொடங்கி, அரண்மனை, தில்லுக்கு துட்டு என அனைத்து படங்களிலும் இதுபோன்ற கதை இருக்கும். ஆனால் இதற்கு முன்னோடி 1990ம் ஆண்டு வெளிவந்த படம் "13ம் நம்பர் வீடு".
பொதுவாக ஆங்கிலேயர்கள் 13ம் எண்ணை விரும்ப மாட்டார்கள். இந்த எண்ணை துரதிர்ஷ்ட எண்ணாக சொல்வதால் தங்கள் வீட்டுக்கூட 13ம் எண்ணை வைக்க மாட்டார்கள். 12ஏ என்று வைப்பார்கள். இதை வைத்து ஹாலிவுட் ஹாரர் படங்கள் வந்திருக்கிறது. அந்த படத்தை தழுவி மலையாள இயக்குனர் பேபி இயக்கிய படம் தான் "13ம் நம்பர் வீடு".
நிழல்கள் ரவி, ஜெய்சங்கர், சாதனா, லலிதாகுமாரி, ஸ்ரீப்ரியா, நளினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர். சங்கீதராஜன் இசை அமைத்திருந்தார், இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டே இந்தப் படம் "ஹவுஸ் நம்பர் 13" என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் ஆனது. இதையும் பேபியே இயக்கினார். அனில் தவான், ரிதா பாதுரி நடித்தனர். அங்கும் வெற்றி பெற்றது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!