பெண்கள் கபடி படத்தை இயக்கும் பெண் இயக்குனர்
ஏப் 28, 2026
சுதா கொங்கரா, கிருத்திகா உதயநிதி, ஐஸ்வர்யா ரஜினி, காயத்ரி (புஷ்கர்) ஹலீதா ஷமீம், லட்சுமி ராமகிருஷ்ணன், சவுந்தர்யா ரஜினி போன்ற பெண் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வரிசையில் இணைந்திருக்கிறார் மேக்னா. கூடுதலாக நடிக்கவும் செய்கிறார். "மலேசியாவில் 999", "ஹார்பர்", " லக்கி நன்" ஆகிய படங்களை இயக்கி, தயாரித்தவர் தற்போது "டி.வி.கே" என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
தற்போது "ரேகாஸ் கபடி குழு" என்ற புதிய படத்தை அவர் இயக்கி தயாரிக்கவும் செய்கிறார். கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நட்டி நட்ராஜ், மூணாறு ரமேஷ். டி.எஸ்.கே., தேனப்பன், வினோத். ரேஷ்மா ஆகியோருடன் மேக்னாவும் நடிக்கிறார்.
படம் பற்றி மேக்னா கூறும்போது “இந்தப்படம் நம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை பற்றியும் அதில் பெண்களின் பங்கு என்ன என்பதையும் சொல்லும் வித்தியாசமான படைப்பாக இருக்கும். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் படைப்பாக இருக்கும்” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!