
5 மொழிகளில் தயாராகும் பீல் மை லவ்
ஜூலை 01, 2026
Advertisement
முன்னணி விநியோகஸ்தரான ஏ.என்.பாலாஜி தற்போது தயாரித்துள்ள படம் "பீல் மை லவ்" ஹரி பிரகாஷ் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.
இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ் மற்றும் பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர். எம்.எஸ்.சதீஷ் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் இசையமைக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் ஹரி பிரகாஷ் கூறும்போது "வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்" என்ற மனதிற்கு இதமான கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சுவாரஸ்யமான தருணங்கள், இயல்பான உறவுகள், ஆழமான உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு தனித்துவமான காதல்-நகைச்சுவைத் திரைப்படமாக இருக்கும்” என்கிறார் இயக்குனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!