மார்ச்சுவரி பாயாக நடிக்கும் புகழ்
ஆக 04, 2026
மதன் துரை இயக்கத்தில் நடிகர் புகழ் கதை நாயகன் ஆக நடிக்கும் பெயரிப்படாத படத்தின் பூஜை சென்னையில் இன்று(ஆக., 4) நடந்தது. பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்கிய மதன் துரை இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகிறார். டிரக் மாபியா மற்றும் ஒரு ஹாஸ்பிடல், டாக்டர், மார்ச்சுவரிபாய், போலீஸ் ஆகியோருக்கிடையே நடக்கும் திரில்லர் கலந்த கமர்சியல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.
மார்ச்சுவரி பாயாக முதல் முறையாக புகழ் நடிக்கிறார். போலீசாக முத்துக்குமார் வருகிறார். டாக்டராக நடிக்கும் ஹீரோயினை தேடிக் கொண்டிருக்கிறார்கள். சென்றாயனுக்கு முக்கிய வேடம் உள்ளது. இந்த மாத இறுதியில் மற்ற நடிகர்கள் முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகழ் ஹீரோவாக இல்லை என்றாலும் அவரை சுற்றி இந்த கதை நடக்கிறது. முக்கியமான நான்கு கேரக்டர்களில் அவர் பிரதானமானவராக இருக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!