இந்தியாவில் வசூலை அள்ளும் எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்
ஜூலை 18, 2025
Advertisement
தமிழ் சினிமாவில் "டூரிஸ்ட் பேமிலி" படத்திற்குப் பிறகு 50 கோடி வசூலைக் கடந்த படங்களாக கடந்த இரண்டு மாதங்களில் எதுவுமே அமையவில்லை. இனி வரும் வாரங்களில் வெளியாக உள்ள படங்களில் சில முக்கிய படங்கள் வசூலைக் குவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், ஹிந்தியில் "ஹவுஸ்புல் 5, சிதாரே ஜமீன் பர்" ஆகிய படங்கள் 200 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற படங்களாக அமைந்தன. தெலுங்கில் "குபேரா, ஹிட் 3" ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருந்தன.
இந்தியத் திரைப்படங்களுக்கு இணையாக கடந்த இரண்டு மாதங்களில் சில ஹாலிவுட் படங்கள் நல்ல வசூலை இங்கு பெற்றுள்ளன. கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி வெளியான "எப் 1" படம் 80 கோடிக்கும் அதிகமான வசூலையும், ஜூலை 1ம் தேதி வெளியான "ஜூராசிக் வேர்ல்டு", படம் 100 கோடியை நெருங்கும் வசூலையும், கடந்த வாரம் ஜூலை 11ல் வெளியான "சூப்பர் மேன்" படம் 40 கோடி வசூலையும் பெற்றுள்ளன.
இந்த வருடம் இதுவரையில் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் "மிஷன் இம்பாசிபிள் - தி பைனல் ரெக்கனிங்" படம் 110 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!