
எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்
டிஎன்பிஎஸ்சி மூலமாக வெளிப்படையான போட்டி தேர்வு நடக்கும் என தமிழக முதல்வர் விஜய் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார். கடந்த காலங்களில் நடந்த முறைகேடு இனி நடக்காது என நம்புகிறோம். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த தவறுகள் இனி நடக்காது என நம்புகிறோம். அந்த முறைகேடு தொடர்பு பல வழக்குகள் இன்றும் நடந்து கொண்டு இருக்கின்றன. தயாரிப்பு நிறுவனத்தால் சில முறைகேடுகளை வெளிப்படையாக சொல்ல முடியாது" என்றார்.
நடிகை துஷாரா பேசகையில், ‛‛இந்த வெப்சீரிஸ் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. நான் நடித்த சார்பட்டா பரம்பரை ஓடிடியில் வெற்றி பெற்றது. இதுவும் ஓடிடியில் வருகிறது. இந்த வெப்சீரிஸ் ஆக் ஷன் காட்சிகளை பார்த்துவிட்டு நடிகை விஜயசாந்தி உடன் ஒப்பிட்டு பேசியது மகிழ்ச்சி. ஒரு ஹீரோவுக்கு ஒரு இயக்குனர் வெற்றி படம் கொடுத்தால் அவருக்கு பரிசு பொருட்களை அவர் கொடுப்பார். வாட்ச், செயின், பைக், கார் என இயக்குனர் சற்குணம் எதை கேட்டாலும் அவருக்கு நான் கொடுப்பேன்"" என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!