
மீண்டும் இணையும் தசரா படக் கூட்டணி!
ஜூலை 20, 2023
Advertisement
அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடலா இயக்கத்தில் நடிகர் நானி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தசரா. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் நானிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அமைந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த வெற்றி கூட்டணி இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள் .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!