மலையாளம், ஹிந்தியில் த்ரிஷ்யம் 3 படம் உருவாகிறது
ஜூன் 14, 2023
Advertisement
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்த திரைப்படம் "த்ரிஷ்யம்". இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டில் "த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம்" நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படமும் தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. சமீபத்தில் த்ரிஷ்யம் படத்தை ஆங்கிலம், கொரியா உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகி வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் "த்ரிஷ்யம்" படத்தின் மூன்றாம் பாகத்துக்கான திரைக்கதை பணிகளில் ஜித்து ஜோசப் ஈடுபட்டு வருகிறார். இதுதான் த்ரிஷ்யம் படத்தின் இறுதி பாகம் என்கிறார்கள். ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக இந்த படத்தை மலையாளத்தில் மோகன்லால் நடிக்க ,ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு துவங்கி ஒரே தேதியில் படத்தை வெளியிடவும் படக்குழுவினர்கள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!