
தட்டிக் கொடுங்க தட்டி விடாதீங்க : தேசிய விருது விமர்சனம் குறித்து தனுஷ் பதிலடி
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் நடந்த தனது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்றார். அப்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தொடர்பான விமர்சனம் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது : ‛‛எனக்கு தேசிய விருது கிடைத்தது விமர்சனம் ஆகியுள்ளது. கடந்த ஆண்டில் வந்த மகாராஜா, மெய்யழகன் போன்ற சில படங்கள் சிறந்த திரைப்படங்கள் தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ‛அது ஒரு கனாக்காலம்", "புதுப்பேட்டை", "வடசென்னை", "கர்ணன்", "மரியான்" மற்றும் "ராஞ்சனா போன்ற என் படங்கள் வெளியான போது, அவற்றுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று யாரும் இவ்வளவு தீவிரமாக குரல் கொடுக்க வரவில்லை. அதற்கு கிடைக்கும் என்றார்கள், ஆனால் கிடைக்கவில்லை.
இன்று, கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் எனது தேசிய விருதை எதிர்த்து பேசுகிறார்கள். ஆனால் எனது பல திரைப்படங்களுக்கு தகுதியான தேசிய விருதுகள் கிடைக்காமல் போனபோது, 10 சதவீதம் பேர் கூட அதைப் பற்றி பேசவில்லை. ஒரே ஆண்டில் ஒரு தமிழ் நடிகருக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பதை அனைவரும் கொண்டாட வேண்டும். இதை எதிர்மறையாக பார்க்காமல், தமிழ் சினிமாவின் வெற்றியாக பார்க்க வேண்டும். "தட்டிக் கொடுங்க தட்டி விடாதீங்க இந்த 2 தேசிய விருது தானாக அமைந்தது.
நம்ம தல அஜித் சொன்ன மாதிரி நீயே தோத்துட்டனு ஒத்துக்கிற வரைக்கும் உன்னை யாராலயும் தோக்கடிக்க முடியாது.
இவ்வாறு தனுஷ் பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள் (3)
கருத்து எழுதுங்கள்தட்டி விடந்திங்க மண்டைல கொட்டி விடுங்க
எனது படங்களைவிட மிகசிறந்த படங்கள் உள்ளது அதற்க்கு கிடைக்காத தகுதி எனக்கு கிடைத்தது வியப்பாக உள்ளது என்று கருத்து கூறியிருந்தால் ரசிகர் மனதில் உயர்ந்த இடம் பிடித்திருப்பார்.
புதுப்பேட்டை மரியான் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருந்தால் விமர்சனம் செய்து இருக்க மாட்டார்கள் ராயன் கேப்டன் மில்லர் படங்கள் தகுதியான படங்களா என்று தனுஷ் சிந்திக்க வேண்டும்