இளையராஜாவுடன் இணைந்த இயக்குனர்கள் : ஆர்வ மிகுதியில் ரசிகர்கள்
ஜூன் 01, 2026
Advertisement
இந்திய சினிமா இசை உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளவர் இசையமைப்பாளர் இளையராஜா. நாளை அவரது 85வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். அதை முன்னிட்டு அவருடைய அடுத்த படமான "மஞ்சணத்தி" படத்தின் அறிவிப்பை இன்று வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்கள்.
இன்றைய முன்னணி இயக்குனர்கள், இளம் இயக்குனர்கள் எனப் பலருக்கும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ஆவல். மற்ற இசையமைப்பாளர்களைப் போல பெரிய இயக்குனர்கள், நடிகர்கள், பெரிய பேனர்கள் என தன்னுடைய இசைப் பயணத்தில் இளையராஜா பாகுபாடு பார்த்ததே கிடையாது. பலரது வெற்றிப் பயணத்தில் இளையராஜாவின் பங்கும் இருக்கிறது.
இப்போதுள்ள இயக்குனர்கள் பலரும் அவர்கள் வயதொத்த இசையமைப்பாளர்களுடன்தான் இணைந்து பணிபுரிகிறார்கள். அவர்கள் இளையராஜாவைத் தேடிப் போவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், சமீபத்தில் சில இயக்குனர்கள் அவர்களது படங்களுக்கு இளையராஜவை இசையமைப்பாளராக சேர்த்ததற்கு அவரது ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் ஆர்வத்துடன் வரவேற்றுள்ளார்கள்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் "பாக்கெட் நாவல்", கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் 10வது படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று அறிவிக்கப்பட்ட "மஞ்சணத்தி" ஆகிய படங்களுக்கு இசை இளையராஜா. இந்தப் புதிய கூட்டணியில் அந்தப் படங்கள் வெளியாகும் நாளை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!