
ஹீரோவாகும் இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன்
இளம் இயக்குனர்கள் நடிகர்களாகும் சீசன் இது. இதில் அடுத்து நடிகராகிறார் இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன். "அருவி", "வாழ்" மற்றும் "சக்தி திருமகன்" உள்ளிட்ட படங்களை இயக்கியவர். அடுத்து ஒரு படத்தை இயக்கி அதில் தானே நாயகனாக நடிக்க இருக்கிறார். இதனை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
இது தவிர பெரிய ஹீரோ நடிக்கும், பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இருக்கிறார். இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. இயக்கம் மட்டும்தான். தான் நடிக்கும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வில் இருக்கிறார். இது சிறு பட்ஜெட்டில் தயராகும் ஒரு குறுகிய கால தயாரிப்பாகும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!