பல வருடங்களாக என்னை பார்க்கவே வரவில்லை : நடிகர் பிரம்மானந்தம் மீது அண்ணன் வருத்தம்
ஆக 22, 20261
Advertisement
நடிகர் ரஜினிகாந்தின் பல முக்கிய நிகழ்வுகளை கவனித்தால், அவர் தந்தை ஸ்தானத்தில் வைத்து போற்றும் அவரது அண்ணன் சத்யநாராயணா தவறாமல் இடம் பெறுவார். ரஜினிகாந்த் அவரை வணங்கி அவருக்கான மரியாதையைத் தவறாமல் செலுத்துவதையும் பார்க்கலாம். அதேசமயம் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தத்தின் மூத்த சகோதரர் ஸ்ரீவதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது தம்பி பிரம்மானந்தம் கடந்த பல ஆண்டுகளாக தன்னை நேரில் வந்து பார்க்கவில்லை; ஒரு போன் செய்து கூட தன்னைப் பற்றி விசாரிக்கவில்லை என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளர்.
இது குறித்து அவர் கூறும்போது, "எங்கள் குடும்பத்தில் மொத்தம் ஆறு சகோதரர்கள். அவர்களில் நாலு பேர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், நாங்கள் இருவர் மட்டுமே இருக்கின்றோம். ஆந்திராவில் எங்களது கிராமத்தில் நான் மட்டுமே தனியாக வசித்து வருகிறேன். சமீபத்தில் பிரம்மானந்தம் எங்களது சொந்த ஊருக்கு வந்து சென்றாலும் கூட, என்னை வந்து சந்திக்கவில்லை. என்றைக்காவது ஒரு நாள் என் தம்பி என்னை அழைத்து, "அண்ணா, எப்படி இருக்கிறீர்கள்" என்று கேட்பான் என்ற ஏக்கத்தோடு நான் இன்னும் காத்திருக்கிறேன் என்று கண்ணீர் மல்க தனது எதிர்பார்ப்பை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால், எந்த இடத்திலும் அவர் தனது தம்பியைப் பற்றி குறை சொல்லி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கோடிக்கணக்கான தெலுங்கு ரசிகர்களை சிரிக்க வைக்கும் பணியைச் செய்துவரும் பிரம்மானந்தம், தனது அண்ணனுக்கு இப்படி கண்ணீரைப் பரிசாக தரலாமா?

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்எல்லாம் பணம் படுத்தும் பாடு பணத்தின் முன் அண்ணன் என்னடா? தம்பி என்னடா? கவிஞர் கண்ணதாசன் என்ன சும்மாவா பாடினார்?