
டாக்சிக் படத்தில் நயன்தாராவிற்கு 12 கோடி சம்பளமா?
இதில் நடிப்பதற்காக நயன்தாராவுக்கு ரூ. 12 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது அவருடைய திரைப்பயணத்திலேயே அதிகப்படியான சம்பளங்களில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இதில் அவர் நடிக்க ரூ. 15 கோடி கேட்டதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, படக்குழுவினர் தொகையைக் குறைத்து ரூ. 12 கோடிக்கு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தப்படத்தில் குறைவான சீன்களில்தான் நயன்தாரா நடித்துள்ளார். அப்படி இருந்தும், அவருக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை அடுத்து நயன்தாரா நடிப்பில், மூக்குத்தி அம்மன் 2, ஹாய், ராக்காயி, டியர் ஸ்டூடண்ஸ், பேட்ரியாட் போன்ற படங்கள் திரைக்கு வர உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!