தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் எல்.ஜி.எம் : சென்னையில் ஆரம்பம்
ஜன 27, 2023
Advertisement
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சினிமா பக்கம் வந்துள்ளார். தோனி என்டர்டெய்ன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ள அவர், முதல்படமாக தமிழ் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு "எல்.ஜி.எம்" (லெட்ஸ் கெட் மேரீட் ) என பெயரிட்டுள்ளனர். இதில் நாயகனாக ஹரிஷ் கல்யாணும், நாயகியாக லவ்டுடே புகழ் இவானாவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நதியாவும், யோகிபாபுவும் இணைந்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
தோனியின் மனைவி சாக்ஷி சிங் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று(ஜன., 27) நடந்தது. இதில் சாக்ஷி, ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
சாக்ஷி சிங் தோனி பேசுகையில்,“ நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்.” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!