
தனுஷ் - தமிழரசன் பச்சமுத்து - சாய் அபயங்கர், புதிய கூட்டணி ?
இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தமிழரசன் பச்சமுத்துவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, "கேக்குறாங்க சொல்லுங்க பிரதர்,” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு தமிழரசன், “பொட்டு வச்ச தங்கக்குடம்" பாட்டுக்கு "அன்பிளக்ட் வர்ஷன்" பண்ணி தா… நீதான்னு சொல்லிடறேன்,” என்று பதிலளித்துள்ளார்.
தனுஷ், தமிழரசன் பச்சமுத்து இணையும் புதிய படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ள படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசை. மீண்டும் தனுஷ், சாய் அபயங்கர் கூட்டணி தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ள படத்தில் இணையப் போகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!