
கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கென் கருணாஸ் முதல்முறையாக இயக்கி, நடித்துள்ள "யூத்" படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இருவரும் கலந்து கொண்டனர்.
தற்போது இந்த நிகழ்ச்சிக்கு பின்னாடி நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் குறித்து கிடைத்த தகவலின்படி, தனுஷ் இந்த விழாவில் கலந்து கொண்டபோது அவருக்கு சுமார் 104 டிகிரி காய்ச்சல் என்கிறார்கள். அவரை சுற்றியுள்ள நண்பர்கள் இந்த காய்ச்சல் உடன் கலந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்தும், கென் கருணாஸூக்கு வாக்கு தந்துள்ளேன். அதனால் கண்டிப்பாக கலந்து கொண்டு தான் ஆகணும் என நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்ற தகவல் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!