
‛டிசிக்கு ‛ஏ சான்று : ஆக., 7க்கு படம் தள்ளிவைப்பு
தணிக்கை அனுப்பப்பட்ட இப்படம் ‛ஏ" சான்றிதழ் பெற்றுள்ளது. அதோடு ரிலீஸ் தேதியையும் ஆக., 7ம் தேதிக்கு மாற்றி உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை போஸ்டர் உடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
முதல்வர் விஜயின் கடைசி படமான ‛ஜனநாயகன்" 6 மாதம் தாமதத்திற்கு பிறகு அடுத்தவாரம் ஜூலை 23ல் ரிலீஸாகிறது. பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது ஒருவாரத்திற்கு முன்னரும், பின்னரும் மற்ற படங்களை திரையிட மாட்டார்கள். ஜனநாயகன் படம் கண்டிப்பாக பல தியேட்டர்களில் 2வது வாரத்தையும் கடந்து ஓடும் என்பதால் அந்த சமயம் தங்களுக்கு போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால் டிசி ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். இந்தப்படம் மட்டுமல்ல நாளை வெளியாகும் அர்ஜூனன் பேர் பத்து, டார்க் ஹெவன், அடுத்தவாரம் வெளியாக இருந்த ஜிவி பிரகாஷின் இம்மார்டல் ஆகிய படங்களும் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!