
டிசி 100 கோடி வசூல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியான இப்படம் இரண்டு வாரங்களிலேயே 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. "ஏ" சான்றிதழ் பெற்ற ஒரு படம் 100 கோடி வசூலைப் பெறுவது ஆச்சரியம்தான்.
இந்த 2026ம் வருடத்தில் 100 கோடி வசூலைக் கடந்த 5வது படமாக இப்படம் உள்ளது. இதற்கு முன்பாக "கருப்பு, ஜனநாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பராசக்தி,” ஆகிய படங்கள் 100 கோடி வசூலித்துள்ளன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான படம் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!