டார்க் ஹெவன் கைவிடப்பட்ட படம் : நடிகை அதிர்ச்சி தகவல்
ஜூன் 29, 2026
Advertisement
கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ்.ஸ்விஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் "தி டார்க் ஹெவன் ". நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களை எடுத்துக் கொண்டு மர்மமான கிரைம் திரில்லராக உருவாகி உள்ளது. ஐந்து கொலைகள் ஒரே விதத்தில் நடைபெற்றுள்ளன. ஆனால் எந்தத் தடயமுமில்லை" என்கிற புள்ளியில் தொடங்குகிற கதை.
டிவி நடிகர் சித்து நாயகனாக நடிக்கிறார். தர்ஷிகா , ரித்விகா நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி இயக்கியுள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது இதில் பேசிய நடிகை ரித்விகா. இது ஒரு கைவிடப்பட்ட படம் என்று கூறினார்.
விழாவில் அவர் மேலும் பேசியதாவது: இவ்வளவு தூரம் இந்தப் படம் வருமா என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 70 சதவிகித படத்தை எடுத்துவிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்து இருக்கிறதே ஒரு சாதனைதான். ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு இவர்களது விடாமுயற்சி தான் காரணம்.
படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்னை வரும். புரிந்து கொள்வதில் சிக்கல் வரும். மழை பெய்ய வேண்டும் என்று பார்த்தால் அன்று மழை வராது. மழை வேண்டாம் என்றால் மழை வரும். எப்படி இருந்தாலும் இயக்குநர் பாலாஜி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருந்தார். கதைகளை மட்டுமே நம்பி இன்று ஹபீபி, நூறு சாமி போன்ற படங்கள் ஓடுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் ஓடும் என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!