
ராஜமவுலி, பஹத் பாசில் கூட்டணியில் உருவாகும் குழந்தைகள் சினிமா
"டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்" என்பது படத்தின் டைட்டில். "பாகுபலி" படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸ் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ளார். காள பைரவா இசை அமைக்கிறார், எதிர்வரும் செப்டம்பர் 11 ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.
கதைப்படி பஹத் பாசில் ஒரு மேஜிக் நிபுணர். அவருக்கு ஒரு சிறுமியை மகிழ்விக்க வேண்டிய பொறுப்பு தரப்படுகிறது. அவர் பல மேஜிக் செய்து அந்த சிறுமியை மகிழ்விக்கிறார். அதில் ஒரு மேஜிக்கில் பிரச்சினை ஏற்பட்டு, அதற்குள் அந்த சிறுமி சிக்கிக் கொள்கிறார். பெரிய போராட்த்திற்கு பிறகு அந்த சிறுமியை அவர் எப்படி மீட்டுக் கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை. காமெடி, பேண்டசி, சென்டிமெண்ட் கலந்த படமாக உருவாகி வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!