புகழ் குழந்தையின் முதல் பிறந்தநாளில் வாழ்த்திய பிரபலங்கள்
செப் 28, 2024
Advertisement
டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் யார் இவர் எனக் கேட்க வைத்து, "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். சினிமாவிலும் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
அவருக்கும் பென்ஸி ரியா என்பவருக்கும் 2022ம் ஆண்டு திருணமானது. கடந்த வருடம் அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. ரித்தான்யா என அக்குழந்தைக்குப் பெயரிட்டனர். அக்குழந்தையின் முதலாவது பிறந்தநாளை நேற்று விமரிசையாகக் கொண்டாடினர்.
அதில் சினிமா பிரபலங்கள், டிவி பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். நடிகர் சூரி, விடிவி கணேஷ், செப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
பிறந்தநாள் புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்திருந்தார் புகழ். மணிமேகலை வரவில்லையா, ஷிவாங்கி வரவில்லையா என பலரும் அதில் கமெண்ட் செய்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!