
கருப்பு வசூல் : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு அடிக்கும் யோகம்
வசூல் நடிகராக இருந்த விஜய், அரசியல் பக்கம் போய் முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். அவர் விட்டுச் சென்ற இடத்திற்கு நிச்சயம் கடும் போட்டி இருக்கும். இப்போது அந்த இடத்தை சூர்யா தற்காலிகமாக நிரப்பி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் இது போன்ற வெற்றியைப் பெற்றால் இன்னும் முன்னேறிச் செல்ல வாய்ப்புகள் உண்டு.
"கருப்பு" படம் தந்த வசூல் காரணமாக சூர்யா நடித்து அடுத்து ஆகஸ்ட் 14ல் வெளியாக உள்ள "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படத்திற்கு இப்போதே நல்ல "ஆபர்" தர பலரும் தயாராக இருக்கிறார்களாம். சராசரியான வியாபாரத்தை எதிர்பார்த்திருந்த நிறுவனத்திற்கு இப்போது அமோகமான வியாபாரம் நடப்பதற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாம். வரும் வாரத்தில் படத்திற்கான வியாபாரம் முடிவடைய வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். "கருப்பு" படத்தை விடவும் அதிகமான வியாபாரம் நடக்கலாம் என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!