
தேனி தோட்டத்தில் பாரதிராஜா உடல் அஞ்சலிக்காக வைப்பு : இறுதி அஞ்சலி செலுத்தும் ஊர் மக்கள்
ரஜினி, கமல், மணிரத்னம், சூர்யா, சிவகுமார், கார்த்தி, நாசர், ராதிகா, இளையராஜா, கங்கை அமரன், தனுஷ், கவுண்டமணி, பாக்யராஜ், பாண்டியராஜன், மாரி செல்வராஜ், ராதா, பி வாசு, ரேகா, சுகன்யா, கார்த்தி, அருண் பாண்டியன், ஜீவா, ராகவா லாரன்ஸ், சித்தார்த், ரம்யா பாண்டியன், கஸ்தூரி, ராஜா, விஜய் சேதுபதி, குமாரராஜா தியாகராஜா, ஆர்வி உதயகுமார், விக்ரமன், லோகேஷ் கனகராஜ், ஹரி உள்ளிட்ட எண்ணற்ற திரைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். நேற்று இரவு நீலாங்கரை இல்லத்தில் இருந்து வண்டியில் புறப்பட்ட பாரதிராஜா உடல் தேனி, காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணை தோட்டத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. இங்கு அவரது உடல் பொதுமக்களுக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 3 மணிக்கு மேல் அவரது உடல் இங்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசு சார்பில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இங்கு நடிகை ராதிகா தனது குருநாதர் பாரதிராஜாவிற்கு இறுதி பிரியாவிடை கொடுக்க வந்துள்ளார். அதேப்போல் நடிகை சுஹாசினியும் வந்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!