
பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் மார்கழி திங்கள்
ஏப் 01, 2023
பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் அவரது மகனான மனோஜ் பாரதிராஜா . அதன் பிறகு சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், விருமன், மாநாடு என பல படங்களில் நடித்தார் மனோஜ். இந்த நிலையில் தற்போது தனது தந்தையான இயக்குனர் பாரதிராஜா நடிப்பில் மார்கழி திங்கள் என்ற படத்தை அவர் இயக்கப் போகிறார். ஜீ.வி .பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இப்படத்தின் டைட்டில் லுக்கை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். மார்கழி திங்கள் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தினை இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!