பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது
மே 13, 2025
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். கடந்த வருடத்தில் அவரது தயாரிப்பில் 2வது படமாக "பென்ஸ்" படத்தை அறிவித்தனர்.
லோகேஷ் கதையில் உருவாகும் இதை ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குவதாகவும் இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும் அறிவித்தனர். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றும், இதன் படப்பிடிப்பு துவங்காமல் நிலுவையில் இருந்தது. இதற்கு சாய் அபயன்கர் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படம் பூஜை நிகழ்வுடன் துவங்கியது. இதில் ராகவா லாரன்ஸ், லோகேஷ் கனகராஜ், பாக்யராஜ் கண்ணன், சாய் அபயன்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பூஜை விழாவின் மூலம் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கவுதம், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜ் மற்றும் கலை இயக்குனராக ஜாக்கி ஆகியோர் இணைந்ததாக படக்குழு அறிவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!