
தாஜ்மஹால் முன்பு யோகாசனம் செய்த அதுல்யா ரவி
பிப் 25, 2024
Advertisement
காதல் கண் கட்டுதே, ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அதுல்யா ரவி. தெலுங்கில் மீட்டர் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப பங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்த அதுல்யா ரவி, தற்போது மிதமான கிளாமருக்கும் மாறி இருக்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பயணிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தாஜ்மஹாலுக்கு சென்ற அதுல்யா அங்கு பல யோகாசன பயிற்சிகளில் தான் ஈடுபட்டபடி ஒரு போட்டோ சூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்கள் வைரலாகின.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!