
செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வரும் அதர்வாவின் அட்ரஸ்
1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதியில் இருந்த ஒரு கிராமம் எந்த மாநிலத்திலும் சேர்க்கப்படாமல் மக்கள் பல ஆண்டுகள் அடையாளம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் பூஜா ஜாவேரி கதாநாயகியாக நடித்துள்ளார் . ஈசக்கி பரத், தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் ரிலீஸூக்கு தயாராகி பல மாதங்கள் ஆன நிலையில் ரிலீஸ் தேதி குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அட்ரஸ் படம் இவ்வருட செப்டம்பர் மாதத்தில் திரைக்கு வருகிறது என இன்று புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!