எப்போதும் என் அருகில் இருப்பதற்கு நன்றி : சாயிஷா
மார் 11, 2023
Advertisement
கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்தபோது ஆர்யா, சாயிஷா இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு 2019ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது அவர்களுக்கு அர்யானா என்ற ஒரு மகள் உள்ளார். ஆர்யா- சாயிஷா தம்பதியினர் தங்களது நான்காவது திருமண நாளை நேற்று கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள சாயிஷா, ‛‛நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கையின் காதலை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். பொறுமை, வலிமை மற்றும் என்னை மகிழ்விக்கும் திறன் கொண்ட ஒரு திடமான மனிதர். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் ஜான். திருமணம் உங்களுக்கு பல சவால்களை கொடுத்தாலும் எப்போதும் என் அருகில் இருப்பதற்கு நன்றி"" என்று பதிவிட்டுள்ளார் சாயிஷா.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!