
கார்த்தி படத்தில் வில்லனாகும் அரவிந்த்சாமி
ஜூலை 25, 2023
Advertisement
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. தற்போது இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளஅந்த படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அதையடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தை முடித்ததும் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் 96 என்ற படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கும் தனது 27வது படத்தில் நடிக்கப் போகிறார் கார்த்தி. சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. பேமிலி சென்டிமெண்ட் கதையில் உருவாகும் இந்த படத்தில் அரவிந்த்சாமி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் படத்தில் நடித்தது போன்று, இந்த படத்திலும் ஒரு வலுவான வில்லன் வேடத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!