
இயக்குனர் ஆனார் ‛அருவி மதன்
ஆக 14, 2023
Advertisement
நடிகர் மதன் "அருவி" படத்தின் மூலம் பிரபலமானதால் "அருவி" மதன் என்று அழைக்கப்பட்டு, இப்போது அந்த பெயருடன் வலம் வருகிறார். தொடர்ந்து கர்ணன், அயலி, துணிவு, மாவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது "நூடுல்ஸ்" என்ற படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனராக களமிறங்கி உள்ளார் . இதில் ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், ஆழியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை வெளியிடுகிறார். 2 நிமிடத்தில் எடுக்கும் முடிவினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இப்படம் பேசுகிறது. வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி அன்று இப்படம் வெளியாகும் என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!