ஆகஸ்ட் 12ல் அருண் விஜயின் 38வது பட டைட்டில் வெளியாகிறது
ஆக 10, 2026
Advertisement
கொம்பன், விருமன் உள்ளிட்ட பல கிராமத்து படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் தனது 38வது படத்தில் நடிக்கிறார் அருண் விஜய். இந்த படம் கிராமத்தில் சென்டிமெண்ட் ஆக் ஷன் கலந்த கதையில் உருவாகி வருகிறது. இப்படத்திற்காக தனது கெட்டப்பை கம்பீரமாக மாற்றி இருக்கும் அருண் விஜய், தற்போது திருநெல்வேலி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
அருண் விஜய் ஜோடியாக மிர்னா மேனன் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இப்படத்தின் வசன காட்சிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து தற்போது ஆக் ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வருகிற 12ம் தேதி இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
இப்படம் குறித்து அருண் விஜய் எனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இயக்குனர் முத்தையா உடன் இணைந்திருக்கும் எனது 38வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும். ஒரு வலிமையான புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!