டிவியிலும் வரவேற்பு பெறாத நிசப்தம்
பிப் 06, 2021
Advertisement
அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலின் பாண்டே மற்றும் பலர் நடித்த "நிசப்தம்" படம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியீட்டிற்கு முன்பு இந்தப் படத்தைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டனர் படக்குழுவினர்.
ஆனால், படம் வந்ததும் அனைத்தும் நொறுங்கிப் போனது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட்டார்கள். ஒரு மொழியில் கூட படம் வரவேற்பைப் பெறவில்லை. மிக மோசனமான விமர்சனங்களையே படம் பெற்றது.
சமீபத்தில் தெலுங்கில் இப்படத்தை டிவியில் ஒளிபரப்பினார்கள். ஆனால், வெறும் 3.85 ரேட்டிங்கை மட்டுமே பெற்றது இந்தப் படம். டிவியில் கூட இப்படத்தைப் பார்க்க மக்கள் தயாராக இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முற்றிலும் அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்ட இந்தப் படம் ஓடிடி வெளியீட்டில் தான் வரவேற்பைப் பெறவில்லை, டிவியிலாவது மக்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்த்த படக்குழுவினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான் கிடைத்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!