
அந்தகன் ஆரம்பம் : விலகிய பெட்ரிக் ; இயக்கத்தையும் ஏற்ற தியாகராஜன்
மார் 10, 2021
Advertisement
ஹிந்தியில் தேசிய விருதை பெற்ற "அந்தாதூன்" படம் தமிழில் பிரசாந்த் நடிக்க, அவரின் தந்தை தியாகராஜன் தயாரிக்க, "அந்தகன்" என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தை மோகன் ராஜா முதலில் இயக்குவதாக இருந்தது. அவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு வர, "பொன்மகள் வந்தாள்" படத்தின் இயக்குனர் பெட்ரிக் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து பிரசாந்தின் தந்தை தியாகராஜன், தயாரிப்போடு இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச் 10) பூஜையுடன் துவங்கியது.
இதனிடையே இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் டுவிட்டர் மூலமும், அறிக்கை மூலம் வெளியிட்ட செய்தியில் ""அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை. அந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். விரைவில் எனது அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகும்"" என தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement













வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!