
மார்ச் 6ல் அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் திருமணம்
தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவான "கௌரவம்" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சிரிஷுக்கும் நயனிகா ரெட்டி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. கடந்த சில வாரங்களாகவே திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள், பார்ட்டி ஆகியவை நடைபெற்று வந்தது. திரையுலகினருக்கு அவரது பெற்றோர் திருமண அழைப்பிதழையும் வழங்கி வந்தனர்.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அல்லு சிரிஷ். “மார்ச் 6ம் தேதி எனக்கும், நயனிகாவுக்கும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொள்ள திருமணம் நடைபெற உள்ளது. மார்ச் 2ம் தேதி அல்லு ஸ்டுடியோவில் தெலுங்கு திரைப்படத் துறையினருடன் எங்கள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை பெருமையுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…