சர்வதேச திரைப்பட விழாவில் ஆதிபுருஷ்
ஏப் 20, 2023
Advertisement
ஹாலிவுட்டின் நட்சத்திரங்களான ராபர்ட் டி நீரோ, ஜேன் ரோசென்டல் மற்றும் கிரேக் ஹாட்காப் ஆகியோரால் தொடங்கப்பட்டது டிரிபெகா சர்வதேச திரைப்பட விழா. சர்வதேச அளவில் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. தற்போது இதன் 22வது விழா வருகிற ஜூன் 7ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நியூயார்க்கில் நடக்கிறது. இந்த விழாவில் ஜூன் 13ம் தேதி இந்தியாவில் தயாராகி வரும் பிரமாண்ட பான் இந்தியா படமான "ஆதிபுருஷ்" திரையிட தேர்வாகி உள்ளது. இதன் மூலம் இந்த படம் சர்வதேச தளதத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓம் ராவத் கூறியதாவது: ஆதி புருஷ் ஒரு படம் அல்ல. இது ஒரு உணர்ச்சி. ஒரு உணர்வு. இந்தியாவின் உணர்வை எதிரொலிக்கும் கதையைப் பற்றிய எங்களது பார்வை. உலகின் மதிப்பு மிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றான டிரிபெகா நடுவர் குழுவால் "ஆதி புருஷ்" தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தபோது ஒரு மாணவனாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன்.
டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் "ஆதி புருஷ்" படத்தின் பிரத்யேக திரையிடல், எனக்கும் என்னுடைய ஒட்டுமொத்த குழுவிற்கும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் நமது கலாச்சாரத்தின் மிகவும் வேரூன்றிய ஒரு கதையை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறோம். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஆதி புருஷை கண்டு ரசிக்கும் பார்வையாளர்களின் எதிர்வினையைக் காண்பதற்கு உற்சாகமாக காத்திருக்கிறோம். என்றார்.
ஆதிபுருஷ் ராமாயணத்தின் நவீன வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ராமனாக பிரபாசும், சீதையாக கிருத்தி சனோனும், ராவணனாக சயீப் அலிகானும் நடிக்கிறார்கள். ஓம் ராவத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை டி சிரீஸ் பூசன் குமார் மற்றும் கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார் மற்றும் ரெட்ரோஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!