என்னுடன் நடிக்க தயங்கிய நடிகைகள் : புகழ் வருத்தம்
பிப் 09, 2024
Advertisement
ஜெ 4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.ராஜரத்தினம் மற்றும் டி.ஜெபா ஜோன்ஸ் தயாரித்துள்ள படம் "மிஸ்டர் ஜூ கீப்பர்". ஜெ. சுரேஷ் இயக்கி உள்ளார். "குக் வித் கோமாளி" மூலம் பிரபலமான நடிகர் புகழ் இதுவரை காமெடியனாக நடித்து வந்தார். முதல் முறையாக நாயகனாக நடிக்கும் படம் இது. ஒரு புலியை காப்பாற்ற போராடுபவரின் கதை. ஷிரின் காஞ்ச்வாலா நாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் புகழ் பேசியதாவது : இயக்குநர் என்னை அழைத்து நீ ஹீரோ, புலியுடன் நடிக்க வேண்டும் என்றார். ஓகே சார் பண்ணிடலாம் என்றேன். யுவன் சார் மியூசிக் என்றார். ஆனால் ஷூட் ஒரு வருடம் ஆகும் என்றார். அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜத்திலேயே புலியைக் கூட்டி வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன்.
இப்படத்தை நம்பி முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த ஷிரினுக்கு நன்றி. நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சில நடிகைகளிடம் சொல்லிவிட்டு, எனது ஜோடியாக நடிக்க முடியுமா என்று கேட்டபோது, எந்த பதிலும் சொல்லாமல், என்னை தங்களது மொபைலில் பிளாக் செய்துவிட்டனர். ஷிரின் கான்ச்வாலா மட்டுமே துணிச்சலுடன் நடித்தார் என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…