
இனியா நடித்த காபி : நேரடியாக டிவியில் வெளியாகிறது
நவ 22, 2022
Advertisement
ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சாரதி சதீஷ் தயாரிப்பில் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் "காபி" என்ற படத்தில் நடித்துள்ளார் இனியா.ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோர்களை இழந்து விடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு சமாளித்து, தனது கனவை நனவாக்க முயற்சிக்கிறார். தன் தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறார். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்து விடும் காலம் வந்து விட்டது என்று நம்பிய வேளையில், எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. அதை அவர் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்? என்பதே கதை. இதில் இனியா முதன் முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் கலர்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. வருகிற 27ம் தேதி ஞாயிற்று கிழமை மதியம் 2 மணிக்கு ஒளிப்பாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!