
தெலுங்கில் பவர்புல்லான அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் அபிராமி
2000களின் துவக்கத்தில் "வானவில்", "விருமாண்டி" என முன்னணி ஹீரோக்களின் படங்களில் இணைந்து நடித்து பிரபலமான நடிகை அபிராமி, ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீப காலமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அப்படி சில படங்களில் நடித்தாலும், சமீபத்தில் வெளியான "பிளாஸ்ட்" திரைப்படத்தில் ஒரு அதிரடியான ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் ரசிகர்களின் வரவேற்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார் அபிராமி. தற்போதைய சூழலில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் மாறி மாறி நடித்து வரும் அபிராமி, ஏற்கனவே தெலுங்கில் "காமாக்யா" என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது "சுதிர் ஜோக்கர்" என்கிற படத்தில் ஒரு சிறுவனுக்கு அம்மாவாகப் பவர்புல் வேடத்தில் நடித்துள்ளார் அபிராமி. பி.எஸ். சுனில் முப்பலா இயக்கும் இந்த படத்தில் சுதிகாலி சுதீர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிக்பாஸ் புகழ் ஆயிஷா அறிமுகமாகிறார். தற்போது இந்த படத்தில் அபிராமி நடித்துள்ள "காயத்ரி தேவி" என்கிற கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் "தாய்க்கு அளித்த வாக்கு என்றும் நிலைத்திருக்கும்" என்கிற கேப்சனுடன், தனது மகனாக நடித்திருக்கும் சிறுவனிடம் அபிராமி சத்தியம் வாங்குவது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!