23 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம்
ஜூலை 22, 2024
Advertisement
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிதா. ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ்.
படம் பற்றி இயக்குனர் சுகன் கூறும்போது, ‛‛காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் அதாவது 23 மணி 23 நிமிட நேரத்தில் ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தை வருகிற 26ம் தேதி வெளியிடுகிறோம்"" என்றார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!