சிட்டுக் குறிஞ்சி படத்திற்காக 80 ஏக்கரில் மலை கிராமம் அமைப்பு
ஜூலை 25, 2026
Advertisement
பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் "சிட்டுக் குறிஞ்சி". அறிமுக இயக்குநர் வி.ஜே.மீனாட்சி சுந்தரம் இயக்குகிறார். ரஜித் மேனன் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் தீப்ஷிகா, நக்ஷா சரண், வி.ஜே.பப்பு, ஜி.எம். குமார், எல்.வி.ஆதவன், ராம்ஸ், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, ஆகியோர் நடிக்கிறர்கள். மேலும் ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைக்கிறார். பிரான்சிஸ் ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குநர் கூறியதாவது: காதல், நகைச்சுவை, பேன்டஸி ஆகியவற்றை புதுமையான திரைக்கதையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் திரை அனுபவத்தை வழங்கும் படைப்பாக உருவாகி வருகிறது. 1983ம் ஆண்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்காக, கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கிராம செட் அமைக்கப்பட்டு, அந்தக் காலகட்டத்தின் இயல்பான சூழல் தத்ரூபமாக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. என்றார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!