
வெக்கை படத்தில் வாழ்க்கையை புரட்டிப்போடும் தெருச் சண்டை
படம் குறித்து இயக்குநர் கூறியதாவது: அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு சாலை தகராறை மையப்படுத்தி உருவாகியுள்ள படம். ஒரு கண நேர கோபம் எத்தனை வாழ்க்கைகளை மாற்றுகிறது என்பதைக் கூறும் ஆக்ஷன் த்ரில்லர் கதை.
சாதாரணமாக தோன்றும் சாலைத் தகராறுகளின் பின்னால் மறைந்திருக்கும் அகங்காரம், ஆத்திரம் மற்றும் அதன் எதிர்பாராத விளைவுகளே "வெக்கை" படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. பரபரப்பான கதையோட்டத்துடன் மனிதர்களின் அகச்சிக்கல்கள் மற்றும் உணர்வுகளை பின்னணியாகக் கொண்டு, காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் அதிரடி அம்சங்கள் கலந்த முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் கமர்ஷியல் என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது” என்கிறார் இயக்குனர் அகிரன் மோசஸ்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!