தெலுங்கிலும் ஒரு ‛கில்லர் : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார்
மார் 03, 2026
Advertisement
நடிப்பிலேயே தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு "கில்லர்" என்ற படத்தை இயக்கி, நாயகனாக நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இதே தலைப்பில் படத்தை வெளியிட உள்ளார். இந்த தலைப்பை எஸ்.ஜே. சூர்யா மிக விரும்பி வைத்தார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் தெலுங்கில் பூர்வாஜ் இயக்கத்தில் அவரது மனைவி ஜோதி பூர்வாஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படத்திற்கு "கில்லர்" என தலைப்பு வைத்துள்ளதாக டீசர் உடன் அறிவித்துள்ளனர். இதனால் எஸ்.ஜே.சூர்யா தனது கில்லர் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு சிக்கல் எழுந்துள்ளது. தொடர்ந்து அதே தலைப்பிலேயே படத்தை வெளியிடுவாரா அல்லது தலைப்பை மாற்றுவாரா என திரையுலக வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!