ரிச்சர்ட் உடன் நடிக்க மறுத்த 8 நாயகிகள்
செப் 22, 2021
Advertisement
திரெளபதி படத்தை தொடர்ந்து மோகன் ஜி இயக்கி உள்ள படம் ருத்ரதாண்டவம். ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கவுதம் மேனன், ராதாரவி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மதமாற்றம், சாதிய அரசியல் உள்ளிட்ட பிரச்னைகளை கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. அக்டோபர் 1ல் படம் தியேட்டரில் வெளியாகிறது.
இயக்குனர் மோகன்.ஜி கூறுகையில் ‛‛இந்த படத்தில் ரிச்சர்ட் ஜோடியாக நடிக்க 8 நடிகைகளிடம் பேசினேன். அவர் முன்னணி ஹீரோ இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டனர். ‛குக் வித் கோமாளி" புகழ் தர்ஷாவின் திறமையை பார்த்து இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கினேன். நான் எதிர்பார்த்த நடிப்பை வழங்கினார். எனது அடுத்த படத்திலும் இவரை நடிக்க வைக்க எண்ணி உள்ளேன். இந்த படத்தில் ராதாரவி - கதவும் மேனன் இடையேயான காட்சிகள் நிச்சயம் வரவேற்பை பெறும். மதமாற்ற பின்னணியில் நடக்கும் சம்பவங்களை இந்த படத்தில் தோலுரித்து காட்டி உள்ளேன்"" என்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!