பரத் படத்தில் 4 ஹீரோயின்கள்
ஆக 30, 2024
Advertisement
ப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி.ஆனந்த் தயாரிக்கும் படம் "ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்" . புதுமுகம் பிரசாந்த் முருகன் இயக்கி உள்ளார். கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி, மிருதுளா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் தவிர கனிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜோஷ் பிராங்ளின் இசை அமைத்துள்ளார். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, உருவாகியுள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் அறிமுக விழா நடந்தது. விழாவில் நடிகை அபிராமி பேசும்போது “ஒரு சில படங்கள் தான், ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மை பயணிக்க வைக்கும், அது போன்ற படம் தான் இது. இந்தப் படத்தில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார். எனக்கு மட்டுமல்ல மொத்த குழுவுக்கும், இது ஒரு முக்கிய படமாக அமையும்” என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!